Essay on Friendship in Tamil Language: In this article, we are providing நட்பின் சிறப்பு கட்டுரை for students and teachers. நட்பு பற்றிய கட்டுரை Students can use this Essay on Friendship in Tamil Language to complete their homework.
நட்பின் சிறப்பு கட்டுரை Essay on Friendship in Tamil Language நட்பு பற்றிய கட்டுரை
குறிப்பு : 1. நட்பு என்பது யாது? 2. நட்புக் கொள்ளும் தற்குரியவர், 3. நட்பு வகை, 4. நட்பு ஆராய்தல், 5. நட்பில் பிழை பொறுத்தல், 6. முடிவுரை.
உலகிலுள்ள ஓரறிவுயிர் முதல் ஐயறிவுயிர் ஈறான எல்லா உயிர்களும் தனித்து வாழ நாம் காண்கின்றோ மில்லை. ஒவ்வொன்றும் தன் தன் இனத்தோடே சேர்ந்து வாழ்வது கண்கூடாகக் காணும் விஷயம். இதனால் கடவுள் சிருஷ்டிக்கு உட்பட்ட உயிர்கள் சேர்க் கையை விரும்பியே நிற்கின்றன என்பது வெள்ளிடை மலை. ஆகவே, இதனை வேறு வகையில் கூற வேண்டு மாயின், ஒவ்வொன்றும் நட்புக் கொண்டுள்ளது என்று கூறலாம். நட்பாவது உயிர்கள் ஒன்றுக்கொன்று கொள்ளும் மன நெகிழ்ச்சியாகிய உள்ளன்பே ஆகும். இத்தகைய நட்புப் பல காரணங்களால் உண்டாகிறது. சிலருக்கு இனிய சொல்லாலும் பொருளாலும் நட்பு உண்டாகிறது. வேறு சிலருக்கு அறிவாலும் ஒழுக்கத் தாலும் நட்பு உண்டாகிறது.
நாம் எப்பொழுதும், உள்ளன்புடையவர் , உட னிருந்து சுக துக்கங்களை அனுபவிப்பர் , துன்பம் வந்த போது உயிரையும் கொடுத்து உதவி புரிபவர், குண நலம், குடி நலம், நற்சுற்றம் முதலியன பொருந்தப் பெற்றவர் , உலகப் பழிச்சொல்லுக்கஞ்சி நடப்பவர் ஆகிய இத்தகைய நற்குண நற்செய்கை உடையவரையே நாடி நட்புக் கொள்ள வேண்டும்.
நட்பு மூன்று வகைப்படும். அவை : தலை நட்பு, இடை நட்பு, கடை நட்பு என்பன. அவற்றுள் தலை நட்பானது சிறந்த நட்பாம். அதுவே முதல் நட்பாகும். அது மனத்தாலும் செயலாலும், ஒற்றுமைப்பட்டு ஒருவ ருடன் ஒருவர் பழகுதலாம் அது நாளுக்கு நாள் வளர் பிறைச் சந்திரனைப்போல வளர வல்லது. நூல்களைப் படிக்குந்தோறும் சுவையும் நயமும் தோன்றுவது போன்று, தலை நட்பும் பயிலுந்தோறும் இன்பமும், அன்பும் பெருக்க வல்லது.
இடை நட்பு என்பது, உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று நடிப்பது ; மேலுக்கு நட்பும் உள்ளுக்குப் பகையும் கொண்டு விளங்குவது .
கடை நட்பு என்பது, தம் நண்பனுக்குப் பல வகை யான துன்பத்தைச் செய்ய எண்ணும் கீழான மக்கள் கொள்ளும் நட்பாம். இந்நட்பு , விரைவில் அழிந்து ஒழியும் தன்மையது; நீடித்திராதது. பொய் பேசி எல்லோருக்கும் கெடுதியும் பகையும் விளைவிப்பது; பொறாமை, கோள் சொல்லல், தூஷணமாகப் பேசுதல், திருடுதல் முதலிய தீக்குணங்களுக்கு உறைவிடமானது. இதுவே கூடா நட்பு என்றும் கூறப்படும். இக் கடை நட்புக் குணமுடையவர் தம்மால் செய்யக்கூடாத காரியங்களையும் செய்து முடித்து விடுவதாகப் பொய்க் கூறி நேசிக்க வருவர். அதனை நம்பி அவரோடு நட்புக் கொள்ளுதல் கூடாது.
ஒருவன் ஒருவனோடு நட்புக் கொள்ள நேரிடின், அவன் மேற்சொன்ன முத்திறத்தில் எத்திறத்தைச் சேர்ந் தவன் என்பதை முதலில் நன்கு ஆராய்தல் வேண்டும். அங்ஙனம் ஆராயாது நட்புக் கொள்ளுதல் கூடாது. அப்படிக் கொள்ளின், அது தீமையாக முடியும். நாம்,
''ஆய்ந்தோய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான் சாந் துயரம் தரும் "
என்ற வள்ளுவனர் எச்சரிக்கையை மறத்தல் கூடாது.
நாம் ஒரு முறை ஒருவனோடு நட்புக் கொண்டு விட் டால், பின்பு அவனை விட்டுப் பிரிதல் கூடாது; அவனிடம் குற்றம் கண்டபோதும் அதனைத்திருத்த முயல வேண்டும். "குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை'' அல்லவா? "நெல் லுக்கும் உமி உண்டு; நீர்க்கும் நுரை உண்டு ; புல் இதழ் பூவுக்கும் உண்டு' என்பதைக் கவனத்தில் வைத்தல் வேண்டும் ; இங்ஙனம் கவனித்துக் குற்றத்தைப் பொறுத்தல் வேண்டும். எத்தனை முறை நம் நண்பன் குற்றம் செய்யினும், அத்தனை முறையும் அவற்றைப் பொறுத்தலே உத்தமக் குணமாம்.
நாம் நட்பின் பெருமையை விளக்கும் பல பெரியார் சரித்திரங்களைப் படித்து நலம் பெறுவோமாக.
0 comments: