Essay on God in Tamil Language : In this article, we are providing தமிழில் கடவுள் பற்றிய கட்டுரை for students of class 3, 4, 5, 6, 7, 8...
Essay on God in Tamil Language : In this article, we are providing தமிழில் கடவுள் பற்றிய கட்டுரை for students of class 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 and 12. This Essay is also searched as "Essay on God in Tamil"
Essay on God in Tamil தமிழில் கடவுள் பற்றிய கட்டுரை
குறிப்பு : 1. முன்னுரை, 2. கடவுள் ஒருவர் உண்டு என் பது, 3. கடவுளின் குணங்கள், 4. நமது கடமை, 5. முடிவுரை.
கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் பலதிறச் சமயங் கள் நிலவுகின்றன. இவற்றுள் நமக்கு அதிகமாகப் புல னாவன சைவம், வைணவம், பௌத்தம், ஜைனம், கிறிஸ் தவம், மகம்மதியம் என்னும் மதங்களே ஆகும். இம்மதங் களில் பல உட்பிரிவுகள் இருப்பினும், இவையே கூடமாக நடைமுறையில் சாணப்பட்டு வருகின்றன. இம்மதங் களேயன்றி, எம்மதத்தையும் சாராத சில பொது மதங் களும் உண்டு. இத்தகைய மதங்கள் பல்வகை நற்கொள் கைகளைப் போதிக்கின்றன. அவற்றுள் மிக முக்கிய மானது எல்லாப் பொருளையும் ஆக்கி அளித்து அழிக் கும் ஒரு பொருள் உண்டு என்பதேயாகும் அதனை மேற் கொண்டு ஒழுகுபவர் ஆஸ்திகர் என்றும், அப்படிப்பட்ட ஒரு பொருள் இல்லை என்று கூறுபவர் நாஸ்திகர் என்றும் கூறப்படுவர். ' அப்படி எல்லாவற்றிற்கும் காரணமாய் இருப்பது ஒரு பொருள் என்றால், அதனை ஏன் அரன், அரி, அருகன், ஏசு , அல்லா என்று வழங்குகின்றனர் ?' என்று ஒரு சிலர் வினவலாம். அங்ஙனம் வினவுவோர்க் குத் திருப்திகரமான பதில் அளிக்கலாம். அந்த ஒரு பொருள் பல பெயர்களையுடையது. இதனாலே தான் அந்த ஒரு பொருளின் தன்மையை நன்கு அனுபவத்தால்
உணர்ந்து, "ஒரு நாமம் , ஓர் உருவம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி,'' என்றும், "பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை' என்றும் பெரியோர் கூறியுள்ளார். பேர் பலவாயினும், பொருள் ஒன்றே யாகும். உதாரணமாகத் தண்ணீராகிய ஒரு பொருளை எடுத்துக்கொள்வோம் : தமிழில் அதனைப் புனல் என் றும், ஆங்கிலத்தில் வாட்டர் என்றும், தெலுங்கில் நீளு என்றும், வடமொழியில் ஜலம் என்றும், இந்துஸ்தானியில் பாணி என்றும், மலையாளத்தில் வெள்ளம் என்றும் வழங்கி வருகின்றனர். இப்பெயர்கள் தண்ணீர் என்னும் ஒரு பொருளையே குறிக்கின்றன அல்லவா? இது போலவே அந்த முழுமுதற் பொருளுக்கும் பல மொழிகளில் பல மதங்களில் பல பெயர்கள் வழங்குகின்றன. அப்படி வழங்கும் பெயர்களுள் கடவுள் என்னும் பெயரும் ஒன்று. நாமும் அப்பெயரையே நமது கட்டுரைக்கு இட்டு, அக்கடவுளைக் குறித்து ஒரு சிறிது கூறுவோம்.
கடவுள் இல்லை என்னும் கொள்கையை நல்ல அறிவுடைய ஒருவன் ஏற்றுக்கொள்ளல் இயலாது. கடவுள் இல்லையென்பவர், " எல்லாம் இயற்கையே செய்து முடிக்கிறது. அதனைச் செய்ய ஒரு பொருள் வேண்டுவது இல்லை,'' என்னும் விதண்டாவாதம் செய்வர். அவரது விதண்டவாதம் நிலைபெறாது. எங்ஙனம் எனில், காட் டில் மரங்கள் வளர்ந்திருக்கின்றன. அம்மரங்கள் எங்க னம் உண்டாயின எனின், 'வித்தினின்றும் உண்டாயின்,' என்னும் பதில் கிடைக்கும். அவ்வித்து எதனின்றும் தோன்றியதெனில், 'மரத்தினின்றும் தோன்றியது,' என்னும் விடையே வரும். இப்படி இவ்விரண்டையுமே கூறிக்கொண்டிருந்தால், இவற்றுள் எது முன் தோன்றி யது என்பதை மக்களால் அறிய இயலாது. ஆகையால் அம்மரத்துக்கு முதற்காரணமாகிய வித்தை முதன் முதல் தோற்றுவித்தவன் ஒருவன் இருக்கவேண்டும் என்பது சிற்றறிவினருக்கும் புலனாகிறது. அவ்வொருவனே கடவு ளாம். ஆகவே, உலகில் காணப்படும் பலதிற இயற்கைப் பொருள்களையும், காட்சிப் பொருள்களையும் கண்கூடாகக் காண்பதனாலேயே கடவுள் உண்டு என்பதை நாம் உணர லாம். இதனாலன்றோ , " ஞாலமே கரியாக (கடவுளே, நீ உண்டு என்பதற்கு உலகமே சாட்சியாக) நான் உனை நச்சி னேன்," என்று ஒரு பெரியார் கூறியுள்ளார்.
புகை கண்ட இடத்து நெருப்புண்டு என்று அறி வதைப் போல, இயற்கைப் பொருள்களைக் கண்டவிடத் துக் கடவுள் ஒருவர் உண்டு என்பதைத் தீர்மானித்தல் வேண்டும். 'ஆனால், புகை வந்த இடத்தைத் தேடிக் கண்டவிடத்து ஆங்கு நெருப்பைக் காண்கிறோம். அது போல, இயற்கையில் கடவுளை நேரிற் காணவில்லையே!' என்று சிலர் சந்தேகிக்கலாம். கடவுளைக் காணுதல் எளி தில் முடியும் காரியம் அன்று. அதற்கான முயற்சி யாகிய பக்தி, வைராக்கியம் முதலியன நம்மிடம் பொருந் தியபோது கடவுளை அட்டியின்றிக் காணலாம். பாலைப் பார்த்து, 'இதில் வெண்ணெய் உண்டு; நெய் உண்டு ,' என்று கூறினால், ' அவை இதில் இல்லையே!' என்று எவ ரேனும் கூறுவாரா? கூறார். ஏனெனில், அவர்களுக்கு அப்பாலைக் காய்ச்சித் தயிராக்கிக் கடைந்து வெண்ணெய் எடுத்து உருக்கினால் நெய்யாகும் என்பது தெரியும். அது போலவே கடவுளைக் காணும் விருப்பமுடைய ஒருவன் வைராக்கியம் என்னும் கோல் நட்டு, அறிவாகிய கயிற் றைக்கொண்டு கடைந்தால், கடவுளாகிய வெண்ணெய் கிடைக்கும் என்ற பொருளில், திருநாவுக்கரசர் என்னும் பெரியார்,
என்று கடவுளைக் காணும் உபாயத்தைத் தெரிவிப்பா ராயினர்.
இத்தகைய கடவுளுக்குக் குலம், குணம், குறி, புலம் , தனக்கென ஒரு பற்று , குற்றம், மைந்தர் , மனை, சஞ்சலம் முதலியன இல்லை. இதனாலே தான் பெரியோர்களும் கடவுளின் தன்மையைக் கூறவந்தபோது, ஆதியும் அந்த மும் இல்லா அரும்பெருஞ் சோதி,' என்றும், 'தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடி,' என்றும் , ' இப்படி யன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன், இவன் இறைவன் என்று எழுதிக் காட்ட ஒண்ணாது,'' என்றும் கூறிப்போந் தனர். அவன் அங்கு இங்கு எனாதபடி எங்கும் பிரகாச மாய் ஆனந்த பூர்த்தியாகி அருளொடு நிறைந்து விளங்கு பவன் ; நெடிய பொருளில் நெடியவனாயும், குறிய பொரு ளில் குறியவனாயும், இப்படி ஒவ்வொரு பொருளிலும் பொருந்தி நிற்பதே அவனது சிறந்த குணமாம். ஆனால் அவன் உயிர்களின் பொருட்டு ஐசுவரியம், வீரியம், கீர்த்தி, சம்பத்து, ஞானம், வைராக்கியம் என்னும் ஆறு குணங்களையுடையவன் என்றும், தன் வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினனாதல், முற்று முணர்தல், இயல்பாகவே பாசங்களினின்று நீங்குதல், பேரருள் உடமை என்றேனும் ; அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித் துவம் என்றேனும் ; அறிவு, காட்சி, வீரியம், இன்பம், நாமமின்மை, கோத்திரமின்மை, ஆயுளின்மை, அழியா இயல்பு உடைமை என்றேனும் வழங்கும் எட்டுக் குணங்களையுடையவன் என்றும், கடவுளுக்குக் குணங் களை ஏற்றிக் கூறுவது அவரவர் புனைந்துரையேயன்றி மெய்யுரையாகாது.
இங்ஙனம் குணம், குறி , பேர், ஊர் ஒன்றும் இல னாய்ப் பார்க்கும் இடமெங்கும் ஒரு நீக்கமற நிறைந்திருக் கின்ற பரிபூரணானந்த வடிவினனாகிய கடவுளுக்கு நாம் செய்ய வேண்டுபவை பல உள. அவற்றுள் ஒன்று , அவன் நம்மை விரும்பி ஏற்று ஆட்கொள்ளும்படி செய் தலேயாகும். அப்படி அவன் நம்மை ஏற்றுக்கொள்ளு வதற்கு நாம் சில முறைகளைக் கையாள வேண்டும். அவையாவன : அவனுக்கு வெறுப்பான செய்கைகளை மேற்கொள்ளாது, விருப்பமான காரியங்களையே மேற் கொண்டு ஒழுகுதலும், அவன் வெறுப்பனவாகிய பொய், பொறாமை, வெகுளி, இன்னாச்சொல் முதலிய தீய குணங் களை அறவே ஒழித்து, பிறருக்கு இதம் செய்தல், ஜீவ காருணியம், அடக்கம், ஒழுக்கம், மெய்ம்மொழி புகலுதல் முதலிய நற்குணங்களை மேற்கொண்டு ஒழுகுதலுமாம். மேலும், அவனை என்றும், எப்பொழுதும் மறவாது துதித்தல் வேண்டும். அவ்வாறு செய்ய இயலாதேல், காலையும் மாலையுமாவது மறவாது துதிக்க வேண்டும். இப்படிச் செய்தால் கடவுள் நம்மைக் கைவிடான்.
ஆகவே, எவ்வளவு கற்ற போதும் கடவுள் ஒருவன் உண்டு என்னும் கொள்கையை மறவாது, அவன் விரும் பும் காரியங்களையே மேற்கொண்டு, வெறுக்கும் விஷயங்க ளைத் தள்ளி நடக்க வேண்டும். "கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் ?"
COMMENTS